மும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை: தாழ்வான பகுதிகளில் வெள்ளம்

மும்பை:



மும்பையில் கொட்டிய கனமழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.மகாராஷ்டிரா, குஜராத், கோவா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது, மும்பையில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு கனமழை கொட்டி வருகிறது. வியாழன் காலை எட்டரை மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச அளவாக பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் 31 செ.மீ., மற்றும் பாந்த்ராவில் 21 செ.மீ., மழை பதிவாகி உள்ளதுஓர்லியில் 20 செ.மீ., தாதரில் 14 செ.மீ., மகாலட்சுமியில் 13 செ.மீ., என நகரின் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. கனமழையின் காரணமாக கிங்ஸ்சர்க்கிள் என்னுமிடத்தில் சயான் போலீஸ் நிலையம் முன்பு குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. நகரில் ஹிந்த்மாதா சிலிப் ரோடு, மகாலட்சும் கோவில் சந்திப்பு, வோர்லி நாகா சர்ச்கேட் சந்திப்பு, அலங்கார் சந்திப்பு, தாதர் டிடி, பிந்தி பஜார், பாந்த்ரா ரயில்வே காலனி, சாய்நாத் சப்வே ஆகிய பகுதிகளில் தேங்கிய வெள்ளநீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அடுத்த இரண்டு நாட்களுக்கு மும்பையிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் மும்பையில் சராசரியாக 84 செ.மீ மழை பதிவாகும். ஜூலை 15வரை 82 செ.மீ., வரை மழை பொழிவு ஏற்பட்டுள்ளது.